டிஸ்கி : வலை பதிவு நண்பர்கள் அனைவருக்கம் வணக்கம் இது எனது முதல் பதிவு.
எங்க கணக்கு வாத்தியார் ரொம்ப நல்லவர், ஆன மனுஷன் தப்பா சூத்திரம் சொன்ன அடிக்கேற அடில ரத்தம் வந்துரும். நான் சுமாராக படிக்கும் மாணவன் எங்கள் schoolல் அதாவது எனது எட்டாம் வகுப்பு "ஏ" பிரிவில். என்னோடைய சகா எல்லாம் ரௌடி பசங்க (நானும் சேர்த்துதான் ! ஹி ஹி ஹி ). ஆனால் நான் ரொம்ப நல்லவன் கணக்கு வாத்தியார்க்கு மட்டும். (என்னால அடிவாங்க முடியாது அதான் ரொம்ப நல்லவன் ஹி ஹி ஹி ஹி )
எனது நண்பர்கள் நாகராஜ், வேங்கடஜலம், சந்தோஷ், அய்யனார், மணிகண்டன், சந்திரசேகர். எனும் பெரிய லிஸ்ட். என்னொரு லிஸ்ட் நல்லா படிக்கற பசங்க குமரன், அறிவொளி, அறிவழன். பொணுங்க 2. ஜெயவர்தினி, என்னொரு பொன்னு பெயர் ஞாபகம் இல்லை.
நான் படித்த ஸ்கூல் நடுநிலை பள்ளி, எங்க ஸ்கூல்ல நடக்கும் எல்லா கலை நிகழ்சிக்கும் நான் தான் வரவேற்பு எழுதுவேன் (அதாங்க welcome hoarding), என் handwriting நல்லா இருக்கும். கணக்கு வாத்தியார் தான் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார்.
எங்க கணக்கு வாத்தியார் பெயர் சுப்பிரமணி ஆன எங்க சகா எல்லாம் அவர கேசவன் கேசவன் என்று சொல்லுவாங்க அவர் திருநெல்வேலி அதனால அவர் பேசும் பாஷை வித்தியமா இருக்கும், பசங்க எல்லாம் அவர் கிளாஸ் ரூம்ல இல்லாத நேரம் பார்த்து அவர் பாஷையிலே அதேமாதரி பேசுவாங்க. (வேங்கடஜலம்) இவனை பற்றி சொல்லிய ஆகனும் அவர் பாஷையிலே பேசிவிட்டு அதிகமா அடிவங்கறவன் இவன்தான் ஆனா அவன் அழுது பார்க்கவே முடியாது, அவன் அழுவது இல்லை. ஸ்கூல் கதை சொன்ன சொல்லிகிட்ட போலாம் சரி இப்போ நான் கற்ற முதல் பாடம் பற்றி சொல்றன்.
அன்று ஒரு நாள் எங்க இங்கிலீஷ் டீச்சர் லீவ், நாங்க எல்லாம் சந்தோசமா எங்க கணக்கு வாத்தியார் பாஷையிலே பேசி பசங்க எல்லாம் சிரித்த முகத்துடன் சந்தோசமா இருந்தோம், என் நேரம், நான் தான் அன்னக்கி அவர மாதிரி பேசினேன். அப்ப பார்த்து திடிர்னு கிளாஸ் ரூம்ல எங்க கணக்கு வாத்தியார் வந்துட்டார், எனக்கு வேர்த்து போச்சி (ஹி ஹி ஹி)
பேசாம போய் என் பெஞ்சில உக்காந்துடேன். என்னை பார்த்து கை காமிச்சார்,
வட்டத்தில் பரப்பளவு என்ன? என்றார்.
நான் மனசுக்குள்ள கடவுளை நெனசிக்கிட்டு,
வட்டத்தில் பரப்பளவு= πr2
சரியா சொல்லிட்டேன் ஆன மனுஷன் தொடர்ந்து அறு சூத்திரம் கேட்டாரு சரியா சொல்லிட்டேன்.
அப்புறம் போர்டுல போய் ஸக்பிஸெல ஒரு புள்ளி வச்சாரு ஆன போர்டுல எல்லாத்தையும் அழிசுட்டார் புள்ளி மட்டும் தான் இருக்கு.
என்னை பார்த்து கேட்டாரு,
என்னையா தெரிது போர்டுல?
நான் சொன்னேன், சார் ஒரு புள்ளி தெரிது.
அடுத்து கிளாஸ் ரூம்ல ஒன் by ஒன் எல்லார்க்கும் இதே கேள்வி தான்,
எல்லாரும் சார் ஒரு புள்ளி தெரிது, சார் ஒரு புள்ளி தெரிதுனு சொல்றங்க, ஒரு சில பொண்ணுக மட்டும் (ரொம்ப அறிவாளிக போல ) போர்டு fulla கருப்பு கலர் தெரிது சார் னு சொல்றங்க
சரி நாம சிக்கிடோம் கேசவன் லாடம் கட்டபோரரு அப்படின்னு பயத்துல அதிகமா வேர்த்து போச்சி எனக்கு.
அப்புறம் புள்ளி சொன்ன எல்லாம் உட்கார சொன்னார் அப்பாடானு சந்தோஷம். அப்புறம் போர்டு fulla கருப்பு கலர் தெரிது சார் னு சொன்ன எல்லாரையும் பார்த்து உங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்ல உக்காருங்க அப்படினர். அப்பாடானு இருந்த என்ன மட்டும் திரும்ப எழுத்திக்க சொல்லிட்டாரு அப்புறம் என்ன, பயத்துல மறுபடியும் ஒரு முறை அதிகமா வேர்த்து போச்சி (ஹி ஹி ஹி ஹி )
என்னை பார்த்து கணக்கு வாத்தியார் , “ என்னையா தெரிது இதெலெருந்து? “
நான் பேந்த பேந்த முழுசிக்கிட்டு, கிளாஸ் ரூம்ல சத்தம் போடாம இருக்கணும் சார் அப்படின்னு சொன்னேன்.
கிளாஸ் ரூம்ல சத்தம் போடாம தான் இருக்கணும் ஆனால் எதுலிருந்து என்ன தெரிது என்றால், எவ்வளவு தான் நல்லவன் என்றாலும் அவன் செய்யும் நல்லது எதுவுமே தெரியாது, அவன் செய்யும் சின்ன சின்ன தவறு தான் பெருசா பேசப்படும். இந்த பெரிய போர்டு fulla கருப்பு கலர் தெரிது ஆன அதெல்லாம் சொல்லாம இங்க உள்ள எல்லாம் 98% பேர் புள்ளி தான் தெரிது அப்படின்னு சொன்னிங்க. so
சின்ன புள்ளி = தவறுகள்
பெரிய போர்டு fulla கருப்பு கலர் = நன்மைகள்
வகுப்புல எவ்வளவு தான் நீ ரொம்ப நல்லவன் என்றாலும், நான் வரும்போது நீ பண்ண சின்ன தவறு தான் எனக்கு பெருசா தெரிது, இனிமேல் தவறு செய்யாம பாத்துக்கோ அப்படின்னு சொன்னார்.
பி.கு: சும்மா கிறுக்கினேன். பிடிக்கவில்லை என்றாலும் கருத்து தெரிவிக்கலாம்.
